உள்நாட்டு செய்திகள்

இருதய அறுவை சிகிச்சைக்கு உள்ளானவர்கள் திடீரென உயிரிழப்பு – சுகாதார அமைச்சு அதிரடி உத்தரவு..


கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய அறுவை சிகிச்சைக்கு உள்ளான நான்கு நோயாளர்கள் உயிரிழந்தமை தொடர்பிலான அறிக்கை 24 மணி நேரத்துக்குள் சமர்ப்பிக்குமாறு
சுகாதார அமைச்சு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பில் விசாரணை செய்வதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

கடந்த 28ம் திகதி கொழும்பு வைத்தியசாலையில் ஆறு பேருக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அவர்களில் நான்கு பேர் திடீர் நடுக்கத்தினால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சைக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சையின் போது வழங்கப்படுகின்ற இரசாயன திரவியம் ஒன்று உரிய தரத்தைக் கொண்டிராமையே இதற்கான காரணம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இந்நிலையிலேயே இது தொடர்பில் உடனடி அறிக்கையை முன்வைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

எக்னேலிகொட வழக்கு மீளவும் 20அன்று விசாரணைக்கு..

wpengine

தெல்தெனியவிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ.

wpengine

ஜனாதிபதியின் புன்னகையும் ரவூப் ஹக்கீமின் விமர்சனமும்

wpengine