உள்நாட்டு செய்திகள்

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு..


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நால்வரதும் விளக்கமறியல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் இன்று(30), இவர்களை ஆஜர்படுத்தியபோதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம். கலீல் ஆகியோருக்கே விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழ் மொழி மூலமான முஸ்லிம் பாடசாலைகளுக்கு விசேட அறிவிப்பு

wpengine

போதைப்பொருள் பாவனைக்கு ஒத்துழைப்பு வழங்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை…

wpengine

டியூஷன் எடுத்த 10 ஆசிரியர்கள் இடமாற்றம்!

wpengine