கேளிக்கை

UPDATE – நடிகர் சங்க வளாக கலவரத்தில் 21 பேர் கைது


63வது நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் நடிகர் சங்க உறுப்பினர்கள் உள்ளே நுழைய முயன்றதாக, இந்நாள் நடிகர் சங்க உறுப்பினர்கள் சிலர் தடுத்து நிறுத்தியதை அடுத்து, நடிகர் சங்க வளாகத்தில் கலவரம் வெடித்தது.

சென்னை லயோலா கல்லுரியில் நேற்று(27) 63வது நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைப்பெற்றது. பொதுக்குழு கூட்டம் நடைப்பெற்றுக் கொண்டிருந்த போது பழைய நடிகர் சங்க உறுப்பினர் உள்ளே செல்ல முயன்றுள்ளனர்.

அவர்கள் பழைய உறுப்பினர்கள் அட்டையை கொண்டு உள்ளே நுழைய முயன்றதாக இந்நாள் நடிகர் சங்க உறுப்பினர்கள் சிலர் தடுத்து நிறுத்தினர்.

இதனால் வளாகத்தின் உள்ளே கலவரம் வெடித்தது. காவல்துறையினர் தடியடி நடத்தி கலவரத்தை கலைத்தனர். இதில் கருணாஸின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.

பொதுக்குழு ஆரம்பித்த சிறிது நேரத்திலே கருணாஸின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. பொதுக்குழு கூட்டம் எந்த முன்னறிப்பும் இல்லாமல் நடைப்பெற்றதாக ராதாரவி தெரிவித்தார்.

மேலும் பழைய நடிகர் உறுப்பினர்கள் 21 பேர், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

மிகவும் சீரியஸான காதல் எதுவும் இல்லை – தொகுப்பாளினி டிடி…

wpengine

சசிக்கு ஜோடியாக கீர்த்தி…

wpengine

24 மணி நேரத்தில் ஆண்கள் 919 பேருடன் உறவு கொண்டு சாதனை படைத்துள்ள உலகறிந்த நடிகை.. – Photos

wpengine