உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மாணவர் ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களுக்கு பிணை.


கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் உயர்தர வகுப்பு மாணவர் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் கைதான நான்கு நபர்களையும் காவற்துறை பிணையில் விடுவித்துள்ளதாக கண்டி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடத்தியவர்களையும், தாக்குதலுக்கு உள்ளானவர்களையும் அழைத்து சமரசம் செய்ததன் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 21ம் திகதி குறித்த இந்த தாக்குதல் இடம்பெற்றது.

குறித்த தாக்குதல் தொடர்பான காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹம்பாந்தோட்டை விவகாரம் – மேலும் 32 பேர் விளக்கமறியலில்…

wpengine

GSP பிளஸ் வரிச் சலுகையினைப் பெறுவது குறித்து ஆராய ஜனாதிபதியினால் குழு நியமனம்..

wpengine

ஜோசப் மைக்கல் பெரேரா இராஜினாமா…

wpengine