உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று.


2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று(18) மாலை நடைபெறவுள்ளது.

இரண்டாம் வாசிப்பின் இறுதி நாள் விவாதம் இன்று முற்பகல் 9.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கடந்த 10ஆம் திகதி நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கடந்த ஆறு நாட்களாக இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்று வந்த நிலையில் இன்று வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

இந்த வாக்கெடுப்பைத் தொடர்ந்து வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் நாளைய தினம் முதல் ஆரம்பமாகவுள்ளது.

வரவு செலவுத்திட்டத்தின் இறுதி வாக்களிப்பு டிசம்பர் மாதம் 10ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

Related posts

சதொச நிறுவனங்களிற்கு 2 இலட்சம் தேங்காய்கள்…

wpengine

முதன் முதலாக எவரஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இலங்கைப் பெண்

wpengine

முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட நாளை(13) மீளவும் CID முன்னிலையில்…

wpengine