உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

டிசம்பர் மாதம் முதல் நீர்க்கட்டணங்கள் அதிகரிப்பு..


எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் நீர் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைர்வர் கே ஏ அன்சார் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய சுமார் 30 சதவீத்தினால் நீர்கட்டணகள் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எவ்வாறெனினும் சமூர்த்தி பயனாளிகள் மற்றும் வழிப்பாட்டு தளங்கள் என்பனவற்றில் இந்த அதிகரிப்புக்கள் மேற்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 0 தொடக்கம் 5 வரையான நீர்அலகுகளுக்கான அறவீடு 8ரூபாவில் இருந்து 16 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மாதாந்த சேவை கட்டணம் 50 ரூபாவில் இருந்து 250 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

இதேவேளை, 16 க்கும் 20க்கும் இடைப்பட்ட நீர் அலகுகளுக்கான அறவீடு 40 ரூபாவில் இருந்து 52 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

குடிநீர் சுத்திகரிப்புக்கான செலவை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த நீர் உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைர்வர் கே ஏ அன்சார் அறிவித்துள்ளார்.

Related posts

சிறைக்கைதிகள் தினம் இன்று(12)… – முதலாவது கொடி ஜனாதிபதிக்கு அணிவிப்பு..

wpengine

மீதொட்டமுல்லயிலிருந்து இடம்மாறிய குடும்பங்களுக்கு ரூ.50,000 கொடுப்பனவு..

wpengine

எம்பிலிபிட்டிய கொலை விவகாரம் – நீதிமன்றில் வைத்திய அறிக்கை சமர்ப்பிப்பு

wpengine