உள்நாட்டு செய்திகள்

மிரிஹானே தடுப்பு முகாமிலிருந்து தப்பியோடிய ஐவரும் கைது..


குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் மிரிஹானே தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது தப்பிச் சென்ற இந்தியப் பிரஜைகள் ஐவரும் மன்னார் பேசாலை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேசாலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலினை அடுத்து இந்தியா நோக்கி புறப்பட இருந்த போது பேசாலை கடற்பரப்பில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில் தப்பிச் சென்றிருந்த 07 சந்தேகநபர்களில் 05 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்கள் இன்று மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன், பேசாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

தலவாக்கலை பிரதான வீதியில் மண்சரிவு – போக்குவரத்து பாதிப்பு…

wpengine

உமா ஓயா மின்னுற்பத்தி நிலைய செயற்பாடுகள்…

wpengine

சுவசரிய அம்பியுலன்ஸ் சேவை கிழக்கு மாகாணத்தில் அறிமுகம்

wpengine