உள்நாட்டு செய்திகள்

கரையோர ரயில் போக்குவரத்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


கரையோர ரயில் போக்குவரத்து சேவைகள் எதிர்வரும் 12 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கல்கிஸை மற்றும் மொரட்டுவை ரயில் கடவைக்கு அருகில் மேற்கொள்ளப்படும் புனரமைப்பு காரணமாகவே அந்த மார்க்கத்திலான ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக, கரையோர ரயில் மார்க்கத்தில் காலை வேளையில் வழமையாக முன்னெடுக்கப்படும் ரயில் போக்குவரத்து சேவைகள், குறித்த காலப்பகுதியில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு மாத்தறையிலிருந்து புறப்படும் ரயில், மொரட்டுவை ரயில் நிலையம் வரை வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாத்தறை நோக்கிப் பயணிக்கும் ரயில்கள், கல்கிஸை ரயில் நிலையத்திலிருந்து பயணத்தை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

உலக உணவுத் திட்ட தலைவருடன் பிரதமர் நீண்ட நேரம் பேச்சு

News Editor

சைட்டம் தொடர்பில் அரசின் தீர்மானம் உறுதிப்படுத்தப்படும் மாணவர்கள் உள்வாங்கப்படுவர். – நெவில்…

wpengine

உயர்தர பரீட்சைக்கான மீள்பரிசீலனை பெறுபேறுகள் வௌியாகியுள்ளன…

wpengine