உள்நாட்டு செய்திகள்

கண்ணீர்புகைப் பிரயோகம் அறிக்கையளிக்க விசேட குழு நியமனம்.


கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி செயலகத்துக்குள் அத்துமீறி நுழைவதற்கு முற்பட்ட, அங்கவீனமடைந்த இராணுவ வீரர்கள் மீது கண்ணீர்ப் புகைக்குண்டுப் பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டமை தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு, மூவர்கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சர் சாகல ரத்நாயக்க, அவ்வமைச்சின் செயலாளருக்கு வழங்கிய பணிப்புரைக்கு அமைவாகவே இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சீ.டி விக்ரமரத்னவை தலைவராக கொண்ட குழுவே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளதோடு, விசாரணை அறிக்கையை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்குமாறும் அமைச்சர் பணித்துள்ளார்.

கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக, கடந்த எட்டு நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த அங்கவீனமடைந்த இராணுவ வீரர்கள், ஜனாதிபதி செயலகத்தை நோக்கி, திங்கட்கிழமை(07) காலை பேரணியாகச் சென்றதுடன், ஜனாதிபதி செயலகத்துக்குள்ளும் அத்துமீறி நுழைவதற்கு முயன்றனர்.

இதன்போதே கலகமடக்கும் பொலிஸார், அவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுத் தாக்குதல் நடத்தி கலைத்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts

ஐ.நா தீர்மானம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு எச்சரிக்கை…

wpengine

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு…

wpengine

1ம் டெஸ்டில் இங்கிலாந்து 171/5 சுருண்டது – 2ம் நாள் இன்று

wpengine