உலக செய்திகள்

அரச பெண் ஊழியர்களது மகப்பேறு விடுமுறை 9 மாதமாக அதிகரிப்பு.


அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை காலத்தை 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக உயர்த்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டது.

இதுதொடர்பாக தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை செயலாளர் எஸ்.சுவர்ணா வெளியிட்டுள்ள அரசாணையில் (அரசாணை எண் 105, நாள் 7.11.2016) கூறியிருப்பதாவது;

அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறை 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக உயர்த்தப்படும் என்று தமிழக முதல்வர் கடந்த 1.9.2016 அன்று சட்டப்பேரவையில் பேரவை விதி 110-ன் கீழ் அறிவித்தார். அவரது அறிவிப்பின் பேரில், பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறை காலம் 6 மாதத்தில் (180 நாட்கள்) இருந்து 9 மாதமாக (270 நாட்கள்) முழு சம்பளத்துடன் உயர்த்த ஆணை பிறப்பிக்கப்படுகிறது.

இந்த அரசாணை வெளியிடப்படுவதற்கு முன்னர் (7.11.2016) மகப்பேறு விடுமுறையில் இருக்கும் ஊழியர்கள் 9 மாதம் வரை விடுமுறை எடுத்துக்கொள்ளலாம். என குறித்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

பெண் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் மகப்பேறு விடுமுறை காலத்தை 9 மாதமாக உயர்த்தி அரசாணை வெளியிட்டதற்காக தமிழக அரசுக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மண்ட் நன்றி தெரிவித்துள்ளார்.

Related posts

ஜோ பைடன் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்

wpengine

மேக்ரானின் அழைப்பை ஏற்றுக் கொண்ட டொனால்ட் டிரம்ப்…

wpengine

பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழப்பு

wpengine