உலக செய்திகள்சூடான செய்திகள்

சூடுபிடிக்கும் அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் இன்று..


உலகமே பெரும்பரபரப்புடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இன்று(08) நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் 14 கோடியே 63 லட்சத்து 11 ஆயிரம் பேர் ஓட்டு போட தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர். ஏற்கனவே சுமார் 4 கோடி பேர் முன்கூட்டியே ஓட்டு போடும் வசதியை பயன்படுத்தி, ஓட்டு போட்டுவிட்டனர்.

இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும் (வயது 68), குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்புக்கும் (70) இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. கருத்துக்கணிப்புகள் ஹிலாரிக்கு சாதகமாக அமைந்தாலும், இருவருக்கும் இடையேயான ஆதரவு வித்தியாசம் குறைவாகவே இருக்கிறது.

இதுவரையிலும் இடம்பெற்ற கருத்துக்கணிப்பில் ஹிலாரிக்கு 48 சதவீதம், டிரம்பிற்கு 44 சதவீதம் பேர் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். பாக்ஸ் செய்தி நிறுவனம் இந்த கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.

முன்னதாக ஏற்கனவே பாக்ஸ் செய்தி நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட கருத்துக் கணிப்பில் ஹிலாரிக்கு 2 சதவீதம் மட்டுமே கூடுதலாக ஆதரவு இருந்தது.

Related posts

எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதித் தேர்தல் நிச்சயம் நடைபெறும் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு..!

wpengine

இந்தியாவும், பாகிஸ்தானும் நிதானமாயிருக்க வேண்டும் – ஐ.நா வலியுறுத்தல்.

wpengine

அடுத்த வருடமும் நாட்டில் இதே அரசாங்கம்தான் ஆட்சியில் இருக்கும் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு..!

wpengine