உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பால்மா விலையில் எவ்வித மாற்றமுமில்லை – நிதி அமைச்சர்


இறக்குமதி செய்யப்படுகின்ற பால்மாவிற்கு வற் வரி அறவிடப்பட்டாலும் அதன் விலைகள் அதிகரிக்கப்படாது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

புதிய வரி திருத்தச் சட்டத்தின் ஊடாக கடந்த நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படுகின்ற பால்மாவிற்கு வற் வரி சேர்க்கப்பட்டது. இதனால் பால்மாவின் விலைகளை அதிகரிக்க பால்மா நிறுவனங்கள் முயற்சித்து வரும் நிலையில் இது தொடர்பாக நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பால்மா நிறுவனங்களினால் முன்வைக்கப்படுகின்ற விடயங்களில் ஏதேனும் நியாயம் காணப்படும் பட்சத்தில், அதுகுறித்து ஆராய்ந்து அவர்களுக்கு மாற்று வழிமுறைகளை ஏற்படுத்தி கொடுக்க தாம் தயார் என நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

400 கிராம் பால்மாவின் விலை 325 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 810 ரூபாவாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தனிநபர் தகவல்கள் சேகரிப்பது குறித்து ஜனாதிபதி அவதானம்

wpengine

‘இடுகம’ நிதியத்தின் மீதி 1128 மில்லியனாக அதிகரிப்பு [PHOTOS]

wpengine

பிரதியமைச்சர் மஸ்தானின் முக்கியஸ்தர் முனாஜித் மௌலவி அமைச்சர் றிஷாட்டுடன் இணைந்து கொண்டார்…

wpengine