உள்நாட்டு செய்திகள்

நாமல் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு முன்னிலையில் ஆஜர்.


நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..

அவர் விசாரணைக்கு செல்வதற்கு முன்னர் ஊடகங்களுக்கு சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார்,

இதன் போது அவர் தெரிவிக்கையில்;

“இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற 125 பில்லியன் ரூபா மோசடியை விட அனுமதிப்பத்திரத்துடன் நான் கொண்டு வந்த வாகனம் தான் பாரிய ஊழலாக கருதப்படுகின்றது.

தற்போது விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளேன். ஒரு வேளை என்னை கைது செய்தால் சட்டம் பதிலளிக்கும்.

மேலும், 125 பில்லியன் ரூபா மோசடி செய்த அர்ஜூன் மகேந்திரனை விட்டுவிட்டு வாகன கொள்வனவிற்காக என்னை விசாரணைக்கு அழைத்துள்ளனர்” எனவும் தெரிவித்துள்ளார்.

குறித்த விசாரணைகளுக்காக நாமல் தனியாகவே வந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மண்டியிடப்பட்ட அதிபரின் மனு விசாரணைக்கு திகதி குறிப்பு…

wpengine

சுமார் 3 கோடி பணம் கொள்ளை

wpengine

தனியார் பஸ் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது

wpengine