உள்நாட்டு செய்திகள்

யாழ்.மாணவர்கள் கொலை – ஐந்து பொலிஸ் அதிகாரிகளும் இன்று நீதிமன்றில்..


யாழ்.பல்கலைக்கழக மாணவர்களது படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐந்து பொலிஸ் அதிகாரிகளும் இன்று(04) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

சந்தேக நபர்களான, பிரதிப் பொலிஸ்மா அதிபர், சார்ஜென்ட் மற்றும் மூன்று காவலர்கள் ஆகியோர் இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் இவ்வாறு முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

குறித்த மாணவர்கள் மோட்டார் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருக்கம் போது மோட்டார் வாகனம் பாதையை விட்டு விலகியமை காரணமாகவே மாணவர்கள் உயிரிழந்தார்கள் என முன்னதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இதன் பின்னர், மரணமடைந்த மாணவர்களின் பிரேத பரிசோதனைகளின் படி, சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்தது.

எனவே கைது செய்யப்பட்டுள்ள ஐந்து பொலிஸ் அதிகாரிகளினதும் பணி இடை நீக்கம் செய்யப்ட்டதுடன் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டனர்.

குறித்த படுகொலை சம்பவம் யாழ். கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் கடந்த மாதம் 20 ஆம் திகதி இடம்பெற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

ஊவா மா.சபையின் விஷேட ஏற்பாடுகள் சட்டமூலம் தோல்வி..

wpengine

உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள்…

wpengine

மீளவும் கொரோனா : பொலிஸ் ஊரடங்கு அமுலுக்கு

wpengine