உள்நாட்டு செய்திகள்

இலங்கை – இந்தியா உறவு தரைமார்க்கத்தால் பலமாகின்றது?



இலங்கை – இந்தியா தரை வழி மார்க்கத்தால் இணைக்கும் திட்டத்தை இரு நாடுகளும் இணைந்து செயற்படுத்த விரும்புவதாக இந்திய நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ், பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளுடன் இந்தியா நேற்று மோட்டார் வாகனங்களுக்கான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய போதே நிதின் கட்காரி இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் 23,000 கோடி இந்திய ரூபா – இலங்கை மதிப்பில் சுமார் 58,000 கோடி ரூபா செலவில் இந்தத் திட்டம் தயாராவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தனுஸ்கோடிக்கும் இலங்கை எல்லைக்கும் இடையிலான 23 கிலோமீற்றர் தூரத்தை பாலம் வழியாக இணைப்பது அல்லது பாம்பன் நகரையும் தலைமன்னாரையும் இணைப்பது எனக் கூறிய அவர் இது இரண்டும் பொருந்தாத சமயத்தில் கடலின் கீழால் சுரங்கப்பாதை அமைத்து இணைக்கவும் திட்டமிடப்படுவதாக நிதின் கட்காரி குறிப்பிட்டுள்ளார்

Related posts

க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைகள் இன்று ஆரம்பம்

wpengine

அரச நிறுவனங்கள் குறித்தான கோப் குழு அறிக்கை நாடாளுமன்றில்..

wpengine

UPDATE – மின்சாரத்தடை வழமைக்கு திரும்பியுள்ளது.

wpengine