உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

நாம் ஒன்றுக்கும் சளைத்தவர்கள் அல்லர் – ஜிம்பாப்வே அணிக்கு எதிராக உபுல் சவால்..


ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 537 ஓட்டங்களை குவித்துள்ளது.

இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று(30) ஹராரேவில் தொடங்கியது.

நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி நேற்று முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுக்கு 317 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

கருணாரத்னே (56), குசால் சில்வா (94) அரைசதமும், குசால் பெரேரா (110) சதமும் அடித்திருந்தார். உபுல் தரங்கா (13), தனன்ஜெய டி சில்வா (10) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இன்று 2வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய தனன்ஜெய டி சில்வா 10 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அசெல கருணாரத்னே (54) அரைசதம் அடித்தார்.

பின்னர் வந்தவர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். கடைசி வரை ஆட்டமிழக்காமல் நிதானமாக ஆடிய உபுல் தரங்கா 110 ஓட்டங்கள் எடுத்தார்.

இலங்கை அணி முதல் இன்னிங்சில் 537 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. ஜிம்பாப்வே அணி சார்பில், கிரிமர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

slc

Related posts

இதுவரையில் 1,633 பேர் கைது

wpengine

பிரபல வானொலி அறிவிப்பாளர் குசும் பீரிஸ் காலமானார்

wpengine

டயனாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Azeem Kilabdeen