ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கடும் அச்சத்தில் நாமல்! நாட்டை விட்டு தப்பியோட திட்டம்



நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கடும் அச்சத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி ஆவார் என ஆரூடம் சொன்ன இந்திய நாட்டை சேர்ந்த குப்தா, அண்மையில் நாமலின் ஜாதகத்தை ஆராய்ந்ததாக தகவல் வெளியாகியிருந்தன.

நாமலின் ஜாதகத்தை ஆராய்ந்ததன் பின்னர் அவர் கூறிய ஆரூடத்தினால் பாரிய அச்சத்தில் நாமல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச நாமல் ராஜபக்சவின் ஜாதகத்தை குப்தாவிடம் வழங்கியதன் பின்னர், தோஷங்கள் நீங்க வேண்டும் என்றால் இந்த நாட்டை விட்டு நாமல் வெளியேற வேண்டும் என குப்தா குறிப்பிட்டுள்ளார்.

2020ஆம் ஆண்டு வரையில் அவர் இலங்கையில் இருந்தால் ஒன்று சிறையில் இருக்க வேண்டும். அல்லது குடியுரிமை இரத்து செய்யப்படும் என ஜோதிடர் ஆரூடம் கூறியிருந்தார்.

எப்படியிருப்பினும் இந்த ஆரூடம் உறுதியாகும் வகையில் நாமல் ராஜபக்ச உட்பட நீலப்படை அணியை சேர்ந்த பலருக்கு எதிராக நிதி மோசடி குற்றச்சாட்டு மற்றும் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் பல முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் தற்போது வரையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இதனால் அச்சமடைந்துள்ள நாமல் எதிர்வரும் நாட்களில் மத ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related posts

இப்படியும் ஒரு தாயா?????

wpengine

தனியார் மயமாகிறது புகையிரத திணைக்களம்..?

wpengine

ரணிலை வீழ்த்த சந்திரிக்கா சூழ்ச்சித் திட்டமாம் – மஹிந்தரின் கணிப்பு சரியாகும் இலக்கு

wpengine