உள்நாட்டு செய்திகள்

பல்கலைக்கழக மாணவர்களின் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பூரண ஹர்த்தாலில் வடக்கு.


யாழ்.பல்கலைகழக மாணவர்கள் இருவர் பொலிஸரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து  இன்று(25)   வட மாகாணத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

தனியார் மற்றும் அரச பேருந்து சேவைகள் நடைபெறாத நிலையில், வியாபார நிலையங்களும்  மூடப்பட்டு சன நடமாட்டம் மிகவும் குறைந்த நிலையில் காணப்படுவதால் வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

அத்துடன் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டுள்ள நிலையில், கல்வி நடவடிக்கைகளும் முற்றாக முடங்கியுள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி,தமிழீழ மக்கள் விடுதலை கழகம், தமிழர் சமூக ஜனநாயக கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட தமிழ் கட்சிகள் இன்றைய ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மனுஷ நாணாயக்காரவின் சகோதரர் கைது

Azeem Kilabdeen

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலைக்கு பூட்டு…

wpengine

அரசின் இரு இணையத்தளங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல்

News Editor