உள்நாட்டு செய்திகள்

சீ.எஸ்.என்.தொலைக்காட்சி அலைவரிசையின் அனுமதிப்பத்திரம் இரத்து.


யோஷித்த ராஜபக்ஷவுக்கு சொந்தமான சீ.எஸ்.என்.தொலைக்காட்சி அலைவரிசையின் அனுமதிப்பத்திரம், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்படுவதாக ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

2011.03.03 ஆம் திகதி சீ.எஸ்.என்.தொலைக்காட்சி அலைவரிசைக்கான அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்பட்டதுடன் குறித்த இந்த அனுமதிப்பத்திரம் தற்போது இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்படுவதாக குறித்த தொலைக்காட்சியின் தலைவர் ரொஹான் வெலிவிட்டவுக்கு கடிதம் ஊடாக அறிவித்துள்ளதாகவும் ஊடக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

மீற்றர் பொருத்தாத முச்சக்கரவண்டிகளுக்கு அபராதம் விதிக்க தீர்மானம்…

wpengine

தரமான கல்வியை வழங்க புதிய கல்வித் திட்டம் அறிமுகம்; பிரதமர் ஹரிணி

Azeem Kilabdeen

மட்டக்குளி சேர் ராசிக் மகளிர் கல்லூரியில் மூன்று மாடிக்கட்டிட திறப்புவிழா…

wpengine