உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தான் பதவி விலக முழுக்காரணம் ஜனாதிபதியே – தில்ருக்ஷி..


ஜனாதிபதி வெளியிட்ட கருத்துத்தான், தான் இராஜினாமா செய்ய நேரடியான காரணமாக அமைந்தது என இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக் குழுவின் முன்னாள் பணிப்பாளர் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் முதல் குடிமகன் தனது பணி மற்றும் சுயாதீன ஆணைக்குழுவின் பணிகள் குறித்து சந்தேகம் வெளியிட்ட பின்னர், பதவியில் தொடர்ந்தும் இருப்பது நியாயமானதல்ல எனவும் தான் நான்கு பக்கங்களை கொண்ட நீண்ட இராஜினாமா கடிதத்தை எழுதி விட்டு பதவி விலகியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வங்கி கணக்கொன்று சம்பந்தமான தகவலை அவருக்கு வழங்கியதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தமையானது முதுகெலும்பில்லாத கோழைத்தமான கருத்து எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எச்சந்தர்ப்பத்திலும் வங்கி கணக்கு குறித்து முன்னாள் ஜனாதிபதியிடம் தான் பேசியதில்லை. மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சம்பந்தமான விசாரணைகளை மூடி மறைத்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களையும் தில்ருக்ஷி மறுத்துள்ளார்.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் சம்பந்தமாகவும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை விசாரணைகளுக்காக பல முறை ஆணைக்குழுவிற்கு அழைத்துள்ளதுடன் விசாரணைகள் தொடர்ந்தும் நடந்து வருகிறது எனவும் தில்ருக்ஷி விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

லங்கா பிரீமியர் லீக்கின் சூதாட்டம் பெயர் பொறித்த சீருடையுடன் விளையாட பாபர் அஸாம் மறுப்பு..!

wpengine

மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமைகளை ஆரம்பித்தார்…

wpengine

தௌபீக் பதவி நீக்கம்

wpengine