உள்நாட்டு செய்திகள்

குப்பைகள் குறித்து சுற்றுநிரூபம் விரைவில்..


அரச நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் தரம் பிரித்து வெளியேற்றுவது தொடர்பான சுற்றுநிரூபம் வெளியிடப்படவுள்ளது.

எதிர்வரும் முதலாம் திகதி முதல் குறித்த இந்த சுற்றுநிரூபம் நடைமுறைக்கு வரவுள்ளதாக அமைச்சர் பைசர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்.

வகைப்படுத்தப்படாத குப்பைகள் உள்ளூராட்சி சபைகளால் ஏற்றுகொள்ளப்படாத புதிய நடைமுறை தொடர்பில் தெளிவூட்டும் நிகழ்வு நேற்று(20) உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சில் இடம்பெற்றது.

இதன் போது அவர் மேற்குறித்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையில், பெருந்தெருக்கள் அருகில் குப்பைகளை வீசுபவர்களுக்கு எதிராக, பொதுக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தல் என்ற சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் பைசர் முஸ்தபா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இலங்கையில் 200 சைனோபெக் எரிபொருள் நிலையங்கள்..!

wpengine

சைட்டம் குறித்து ஒரு வாரத்தினுள் தீர்மானம் வேண்டும் – அரசுக்கு GMOA சிவப்பு சமிஞ்சை….

wpengine

இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

wpengine