உள்நாட்டு செய்திகள்

தில்ருக்‌ஷி டயஸ் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக சத்தியப் பிரமாணம்.


இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தில்ருக்‌ஷி டயஸ் விக்ரமசிங்க மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இவர் அண்மையில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இதனையடுத்து, நேற்றையதினம்(19) அவரது இராஜினாமா ஜனாதிபதியால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே அவருக்கு இப்புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக கடந்த பெப்ரவரி மாதம் பதவி ஏற்க முன்னதாக, தில்ருக்‌ஷி டயஸ் விக்ரமசிங்க மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக பதவி வகித்துக் கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அடுத்த ஆண்டு ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல் நடாத்தப்படும் – ஜனாதிபதி..!

wpengine

பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கைது

wpengine

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இம்மாத நடுப்பகுதியில் இந்தியாவுக்கு விஜயம்…

wpengine