உள்நாட்டு செய்திகள்

சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான முக்கிய கலந்துரையாடல் இன்று..


அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று இன்று(18) நடைபெறவுள்ளது.

சுதந்திர கட்சியின் பொது செயலாளர் துமிந்த திஸாநாயக்கவின் இல்லத்தில் குறித்த இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் சுதந்திர கட்சியின் எதிர்கால முன்னெடுப்புகள் குறித்தும் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கான சுதந்திர கட்சியின் முன்மொழிவுகள் குறித்தும் ஆராயப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

கடற்படையினால் பொது மக்களுக்கான அறிவுறுத்தல்

wpengine

வெளிநாட்டவர்களுக்கு சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு தடை

wpengine

இரு வாரங்கள் அரசுக்கு காலக்கெடு – பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம்…

wpengine