உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

லசந்த விக்கிரமதுங்கவை, தானே கொலை செய்ததாக கூறி இராணுவ புலனாய்வு அதிகாரி தற்கொலை (Update).


சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை, தானே கொலை செய்ததாக, கொலைக்குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரியொருவர், அது தொடர்பான கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு நேற்று(14) தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சார்ஜன்ட் ஒருவரே, இந்தக் கொலைக் குற்றத்தை ஏற்றுக்கொண்டவராவார்.

அவர் எழுதிவைத்துள்ள கடிதத்தில், “தெரிந்துகொள்ள வேண்டியவர்கள் தெரிந்துகொள்வதற்காக” என்று தலைப்பிட்டுள்ளார். இக்கடிதம், அவரது காற்சட்டை பொக்கெட்டில் இருந்துள்ளது.

லசந்த விக்கிரமதுங்கவை, தானே கொலை செய்ததாகவும் தன்னுடைய நண்பன் மலிந்த உதலாகம, குற்றவாளி அல்ல என்றும், அவர் அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

யாழ். வைத்தியசாலையில் 6 பேருக்கு கொரோனோ இல்லை

wpengine

மேலும் 377 பேர் குணமடைந்தனர்

wpengine

கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாவை பதவியில் இருந்து அகற்றுமாறு கோரி ஹர்த்தால்…

wpengine