உள்நாட்டு செய்திகள்

HSBC வங்கியின் நிதி முறைகேடுகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் விசாரணைகள் ஆரம்பம்.


HSBC வங்கி ஊடாக இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

நாணயமாற்று கட்டுப்பாட்டு விதிகளை மீறி இந்த நிதி முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் டிசம்பர் மாதம் வரை வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு 30 மில்லியன் அமெரிக்க டொலர் மற்றும் மற்றுமொரு வெளிநாட்டு நிறுவனத்திற்கும் இந்த தொகைக்கு ஈடான நிதி, இலங்கையில் இருந்து வெளியில் கொண்டு செல்வதற்கான வாய்ப்புக்கள் குறித்த HSBC வங்கியால் வழங்கப்பட்டுள்ளது.

கடல் கடந்த வங்கி கணக்குகளால் இந்த முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை HSBC வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்ட வெவ்வேறு வகையான கணக்குகளுக்கான புதிய அம்சங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியிடம் அறிவிக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஒருபோதும் நிறுவப்போவதில்லை – பிரதமர்…

wpengine

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

wpengine

தீவிரவாத தாக்குதலுடன் தொடர்புடைய மதவாச்சிய – இகிரிகொல்லேவ பகுதியில் வைத்து ஒருவர் கைது..

wpengine