உள்நாட்டு செய்திகள்

சரத் பொன்சேகாவின் மனு நிராகரிப்பு



பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் செயலாளர் சேனக டி சில்வா தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை மீளப் பெற்றுத் தருமாறு கோரி உயர் நீதிமன்றில் சேனக டி சில்வா மனு தாக்கல் செய்திருந்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்கிய காரணத்தினால் பாராளுமன்ற உறுப்புரிமையை மீள வழங்குமாறு மனுவில் கோரப்பட்டிருந்தது.

எவ்வாறெனினும் இவ்வாறான மனுவொன்றை தாக்கல் செய்ய சேனக்க டி சில்வாவிற்கு எவ்வித சட்ட அதிகாரமும் இல்லை என சட்ட மா அதிபர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இதனை அடுத்து குறித்த மனு உயர் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் – 14 மனுக்களும் 19ம் திகதி விசாரணைக்கு..

wpengine

கடற்பிரதேசங்களில் கடும் மழை…

wpengine

அனர்த்த நிலைமை குறித்து நாடாளுமன்றில் இன்று விசேட கலந்துரையாடல்

wpengine