உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

வங்காளியினை தோற்கடித்து ஆப்கானிஸ்தான் முன்னிலையில்..


ஆப்கானிஸ்தான் அணி வங்காளதேச அணியை 1-1 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்தது. தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை மறுதினம் நடக்கிறது.

வங்காளதேசத்துக்கு சென்றுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் 2-வது ஆட்டம் மிர்புரில் நேற்று(28) நடந்தது.

முதலில் துடுப்பாடிய வங்காளதேசம் 49.2 ஓவர்களில் 208 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. அறிமுக வீரர் மோசடெக் ஹூசைன் 45 ரன்களும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), முஷ்பிகுர் ரஹிம் 38 ரன்களும் எடுத்தனர்.

அடுத்து களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 212 ரன்கள் சேர்த்து 2 விக்கெட் வித்தியாத்தில் திரில் வெற்றியை பெற்றதுடன், தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்தது.

கெப்டன் அஸ்கார் ஸ்டானிக்ஜாய் 57 ரன்களும், முகமது நபி 49 ரன்களும் விளாசி வெற்றிக்கு வழிவகுத்தனர். தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை மறுதினம்(01) நடக்கிறது.

Related posts

இங்கிலாந்து மருத்துவ சபையினால் சைட்டம் மருத்துவ கல்லூரி நிராகரிப்பு..

wpengine

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தில் பதற்றம்

wpengine

ரஞ்சனை கைது செய்ய உத்தரவு..!

wpengine