உள்நாட்டு செய்திகள்

மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை.



நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு பாரிய நிதிமோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.இதற்கமைய இன்று(29) வியாழக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் முன்னிலையாகுமாறு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் மஹிந்தானந்த அளுத்கமகே விளையாட்டுத்துறை அமைச்சராக பதவிவகித்தபோது ரயில்வே திணைக்களத்திற்கு ஒருகோடி ரூபா பெறுமதியான காணி ஒன்றை சட்டவிரோதமான முறையில் தனதாக்கிக் கொண்டார் என்ற குற்றச்சாட்டு காணப்படுகின்றது.

அதுமட்டுமன்றி ரயில்வே திணைக்களத்திற்கு சொந்தமான மேலும் சில சொத்துக்களையும் மஹிந்தானந்த அளுத்கமகே முறைகேடாகப் பயன்படுத்தியிருப்பதாகவும் மேலும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Related posts

நாட்டில் நிலவும் வறட்சியினால் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படுமா.?

wpengine

பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் இறுதி அறிக்கையானது அடுத்த மாதம் சபாநாயகருக்கு

wpengine

பான்.கீ.மூன் இடமிருந்து மைத்திரிக்கு தொலைபேசி அழைப்பு

wpengine