உள்நாட்டு செய்திகள்

உதயங்கவை கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிப்பது தொடர்பான உத்தரவு 30ம் திகதியன்று..


ரஷ்யாவின் முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிப்பது தொடர்பான உத்தரவு எதிர்வரும் 30ம் திகதி பிறப்பிக்கப்படும் என கொழும்பு நீதவான் லங்கா ஜயரட்ன இன்று(26) தெரிவித்தார்.

அது , காவற்துறை நிதி குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த விடயங்களை ஆராய்ந்த பின்னராகும்.

2006ம் ஆண்டு இலங்கை விமானப்படைக்கு மிக் விமானங்கள் கொள்வனவு செய்தது தொடர்பான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றினை பெற்றுக்கொடுப்பதற்கு அவர் அழைக்கப்பட்டிருந்தும், அவர் அதனை வேண்டுமென்றே தவிர்ப்பதாக காவற்துறை நிதி குற்றத்தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் இன்று தெரிவித்திருந்தது.

இதன் காரணமாக அவரை கைது செய்வதற்கு சர்வதேச பிடியாணை பிறப்பிக்குமாறு காவற்துறை நிதி குற்றத்தடுப்பு பிரிவு நீதவானிடம் கோரியிருந்தது.

Related posts

யாழ்.மாநகர சபை; வரவு செலவுத்திட்டம் ​தோல்வி

wpengine

தில்ருக்‌ஷி டயசுக்கு அழைப்பு

wpengine

உள்ளூராட்சித் தேர்தல் விவகாரத்தினை மைத்திரியிடம் ஒப்படைக்கும் மஹிந்தர்

wpengine