உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஒருநாள் அணியில் மீண்டும் உமர் அக்மல்..


பாகிஸ்தான் – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபூதாபியில் நடைபெற்று வருகிறது.

மேற்குறித்த போட்டிகளுக்கு பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் (செப்டம்பர் 30, அக்டோபர் 2 மற்றும் அக்டோபர் 5) நடக்க இருக்கிறது. முதல் இரண்டு போட்டிகள் ஷார்ஜாவிலும், கடைசி போட்டி அபூதாபியிலும் நடக்கிறது.

இதற்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உமர் அக்மல், ஆசாத் ஷபிக் ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது.

முன்னணி துடுப்பாட்ட வீரர் உமர் அக்மல் பாகிஸ்தான் அணிக்காக கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ணதில் கடைசியாக இடம்பிடித்திருந்தார். அதன்பின் தற்போதுதான் அவருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.

இங்கிலாந்து தொடருக்கான பயிற்சி முகாமில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக உமர் அக்மல் அணியில் சேர்த்துக் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. அதன்பின் தற்போது எந்தவித அசம்பாவிதத்திலும் ஈடுபடாமல் இருப்பதால் அணிக்கு திரும்பியுள்ளார்.

ஆசாத் ஷபிக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜிம்பாப்வே அணிக்கெதிராக கடைசியாக இடம்பிடித்திருந்தார். தற்போது உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அணியில் இடம் கிடைத்துள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் அணி விவரம்:-

1. அசார் அலி (தலைவர்), 2. ஷர்ஜீல் கான், 3. பாபர் அசாம், 4. ஆசாத் ஷபிக், 5. சோயிப் மாலிக், 6. சர்பிராஸ் அகமது, 7. உமர் அக்மல், 8. மொகமது ரிஸ்வான், 9. மொகமது நவாஸ், 10. இமாத் வாசிம், 11. யாசீர் ஷா, 12. ரஹத் அலி, 13. மொகமது ஆமீர், 14. வஹாப் ரியாஸ், 15. ஹசன் அலி, 16. சோகைல் கான்.

Related posts

அமெரிக்காவில் தலைமறைவான இலங்கையர்கள்

wpengine

இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமனம்..

wpengine

ஊரடங்கை மீறிய 88 பேர் கைது

wpengine