உள்நாட்டு செய்திகள்

இன்றிலிருந்து தேவைகளுக்காக பாடசாலைக்கு வரும் தாய்மாருக்கு சேலை தேவையில்லை.


பல கடமைகள் நிமித்தம் பாடசாலை வளவுக்குள் வருகை தரும்போது மாணவர்களின் தாய்மார் கட்டாயமாக சேலை அணிந்தே வர வேண்டும் என்ற நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது.

குறித்த நடைமுறையை நீக்குமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், துறைசார் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேச பாடசாலைகளில் சில தேவைகளுக்காக பாடசாலைக்குள் செல்லும் தாய்மார் சேலை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனவே இது தொடர்பில் கவ்வி அமைச்சர் கவனம் செலுத்தியுள்ளார். இந்த நடைமுறையை நீக்க கோரி பாடசாலை அதிபர்கள் மற்றும் அதிகாரிகளை தெளிவுப்படுத்தி சுற்றுநிருபம் ஒன்றினையும் அனுப்புமாறும் தனது அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related posts

முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் இற்காக சட்டத்தரணிகள் சங்கம் முன்வருகிறது..

wpengine

அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட நால்வருக்கு வௌிநாடு செல்ல தடை ..

wpengine

டெங்கு நோயாளர்களது எண்ணிக்கை 76,000 ஆக உயர்வு..

wpengine