கேளிக்கை

தந்தையால் அனுதினம் சோர்வடையும் பிரபல நடிகை சோனம்..



நடிகை சோனம் கபூரின் தந்தை, அனில் கபூர், பாலிவூட்டில் பிரபல நடிகர். அவருடன் பல பிரபலங்கள் நண்பர்களாக இருக்கின்றனர்.

இந்நிலையில் அவரை பற்றி, சோனம் கபூர் கூறியதாவது, “என் தந்தையால் பல பட வாய்ப்புகளை இழந்துள்ளேன். பிரேம் ரத்தன் தன் பாயோ படத்தில் சல்மான் கான் என்னுடன் நடிக்க விரும்பவில்லை. அனில் கபூர் என் நெருங்கிய நண்பர். அவர் மகளுடன் நான் ரொமான்ஸ் செய்வதா என்று கூறி என்னுடன் நடிக்க மறுத்துவிட்டார். அவரால எனக்கு பல பட வாய்புகள் தவறிப் போகிறது.

மேலும், இயக்குனரும், நடன இயக்குனருமான ஃபரா கான் படங்களில் நான் இது வரை நடித்தது இல்லை. அவர் என்னை ஒரு நடிகையாகவும் பார்க்கவில்லையாம், காரணம், அவர் என் தாயின் நெருங்கிய தோழிகளில் ஒருவர்.” என்றார்.

சமீபத்தில், சோனம் கபூர் நடிப்பில் வெளியான ’நீரஜா’ படம் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

38 ஆண்டுகளுக்கு பின்னர் திறக்கப்பட்ட சவூதி திரையரங்கில் ‘Black Panther’…

wpengine

நீரில் மூழ்கியுள்ள தங்காலை மக்களின் துயரில் ஷிரந்தி ராஜபக்ஷ… [PHOTOS]

wpengine

உலக அளவில் ஒரு பாடல் விரைவில் – ஏ.ஆர்.ரஹ்மான்

wpengine