உள்நாட்டு செய்திகள்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பொலிஸ்மா அதிபர் அடங்கிய குழுவினர் சந்திப்பு..


பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.

மேற்குறித்த இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இன்று(21) இடம்பெறவுள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ்மா அதிபர் பதவி ஏற்ற பின்னர் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் கலந்தாலோசிப்பதற்காகவே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலின் போது சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவும் கலந்துக் கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இதன் போது பிரதமர் பரிசீலிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

கல்கிஸ்ஸை சம்பவத்தின் பொலிஸ் அதிகாரிக்கு பிணை

Azeem Kilabdeen

ஹம்பாந்தோட்டை விவகாரம் – மேலும் 32 பேர் விளக்கமறியலில்…

wpengine

இரு ரயில்கள் சேவையிலிருந்து நிறுத்தம்

wpengine