உள்நாட்டு செய்திகள்

புஸ்ஸல்லாவ இளைஞனின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு – ஆர்ப்பாட்டங்களுக்கு தடையுத்தரவு.


பிடிவிராந்து பிறப்பிக்கபட்ட நிலையில் புஸ்ஸல்லாவை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த இளைஞன், தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று முன்தினம்(17) தற்கொலை செய்து கொண்டார்.

குறித்த நபர் தான் அடைக்கப்பட்டிருந்த கூண்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து உடனடியாக இரு பொலிஸார் பணி நீக்கம் செய்யப்பட்டனர். எனினும் புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்தில் உள்ள அனைத்து பொலிஸாரையும் இடமாற்ற வேண்டும் என பொதுமக்கள் நேற்று மாலை 3 மணிவரை கண்டி நுவரெலியா வீதியில் புஸ்ஸல்லாவ பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பிரேத பரிசோதனைக்கு பின்னர் சடலம் நேற்றிரவு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதோடு இன்று மாலை 3 மணிக்கு இறுதிக் கிரியைகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நல்லடக்கம் செய்யும் முன்னரோ அல்லது அதற்கு பின்னரோ போராட்டங்கள் நடாத்த முடியாது என தடை உத்தரவு பிறபிக்கபட்டுள்ளது.

Related posts

பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை – நிறுவனம் சுற்றிவளைப்பு

wpengine

ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு வாக்கெடுப்பின்றி இன்று(13) நிறைவேற்றம்…

wpengine

ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் மஹிந்த

wpengine