உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

முன்னாள் மேற்கிந்திய தீவுகள் அணியின் அணித்தலைவர் ஓய்வு..


முன்னாள் மேற்கிந்திய தீவுகள் அணியின் அணித்தலைவர் ராம்நரேன் சர்வான் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பை இன்று வெளியிடுவார் என சர்வதேச ஊடகங்களால் மேற்கோற்காட்டி செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.

சர்வான் இறுதியாக இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 2013 ஆம் ஆண்டில் பங்குகொண்டிருந்தார்.

இவர் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக 286 சர்வதேச போட்டிகளில் பங்குகொண்டுள்ளார்.

36 வயதை அடைந்துள்ள சர்வான், தமது முதல்தர கிரிக்கட் பிரவேசத்தை 15 வயதாக இருக்கும் போது மேற்கொண்டார்.

1995, 96ஆம் ஆண்டு காலப்பகுதியில் பபடோஸ் அணிக்கு எதிராக, கயானா அணியில் இதன்போது அவர் விளையாடினார்.

சர்வான் மேற்கிந்திய தீவுகள் அணிக்கான 4 டெஸ்ட், 5 ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் இரண்டு இருபதுக்கு இருபது போட்டிகளுக்கு தலைமைத்துவம் வழங்கியுள்ளார்.

Related posts

அரநாயக்க பிரதேசத்திற்கு ஜனாதிபதி விஜயம்

wpengine

“இனவாதத் தீயை அணைக்கும் செயற்பாடுகளை முன்னிலைப்படுத்துவோம்” பொலன்னறுவை, திவுலான நிகழ்வில் அமைச்சர் ரிஷாட்!

wpengine

வரட்சியான வானிலையில் சிறிது மாற்றம்…

wpengine