உள்நாட்டு செய்திகள்

டி.வி.உபுல் பிணையில் விடுதலை



தென் மாகாண மீன்பிடித்துறை அமைச்சர் டி.வி.உபுல் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த டி.வி.உபுல் இன்று (15) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, அவரை 25,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 10 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு ஆள் பிணையிலும் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

”பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு அதிகாரிகள் மஹிந்த ஆட்சியில் கல் எறிந்து கொல்லப்பட வேண்டும்” என டி.வி.உபுல் பகிரங்கமாய் மேடையில் கருத்து வெளியிட்டார்.

இது தொடர்பில் அவரிடம் விசாரணை செய்த கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு டி.வி.உபுலை கைது செய்ததுடன் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலிலும் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒரே குடும்பத்தில் மூவரை பலியெடுத்த ‘உட​ரட்ட மெனிக்கே’

wpengine

‘விளையாட்டின் வெற்றி தோல்வியினை எம்மால் கட்டுப்படுத்த முடியாது’, ஆனால் நாங்கள் சிறப்பாகவே விளையாடினோம்..!

wpengine

சீகிரியாவில் பொலித்தீன் தடை…

wpengine