உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஷகீப் கொலை – சந்தேக நபர்களது விளக்கமறியல் நீடிப்பு.



கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட, பம்பலப்பிட்டியைச் சேர்ந்த கோடீஸ்வர இளம் முஸ்லிம் வர்த்தகர் முஹம்மட் ஷகீப் சுலைமானின் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதாகியுள்ள சந்தேகநபர்கள் 8 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் 15ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று(05) உத்தரவிட்டது.

குறித்த சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தும் வரை பெயர், ஊர் விவரங்களை வெளியிட வேண்டாம் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பொதுத் தேர்தல் தொடர்பிலான விசேட தீர்மானம் இன்று

wpengine

வில்பத்து வனப்பகுதி அழிக்கப்பட்டது முஸ்லிம்களால் அல்ல – இலங்கைச் சூழலியலாளர்…

wpengine

பாராளுமன்ற தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல முடியும்

wpengine