உள்நாட்டு செய்திகள்

முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகத்தில் சற்று முன்னர் அவசரப் பேச்சுவார்த்தை : அமைச்சர் ரிஷாதும் பங்கேற்பு



அரசியலமைப்பின் சர்ச்சைக்குரிய உத்தேச 20ஆவது திருத்தத்தம் தொடர்பில் சிறுபான்மையினக் கட்சிகளினதும், சிறிய கட்சிகளினதும் பிரதிநிதிகள் மீண்டுமொரு சுற்று அவசரப் பேச்சுவார்த்தையை சற்று முன்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையம் தாரூஸ்ஸலாத்தில் நடாத்தியது.

அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் எம்.ரீ.ஹஸனலி, பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் திஸ்ஸ வித்தாரன, டக்ளஸ் தேவானந்தா, விஜித ஹேரத், மேல் மாகாண சபை உறுப்பினர் மனோ கணேசன், ஆனந்த மானமடு, சரத் மனமேந்திர, குமரகுருபரன் ஆகியோர் உட்பட இன்னும் சிலர் கலந்து கொண்டு மிகவும் காட்டமான கருத்துக்களையும், விமர்சனங்களையும் தெரிவித்தனர்.

Related posts

அவசரகால நிலையின் போது சட்டத்தை மீறி செயற்படும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை…

wpengine

சேதங்கள் தொடர்பிலான மதிப்பீட்டு அறிக்கையை மீளவும் சமர்ப்பிக்குமாறு கோரிக்கை…

wpengine

அரசாங்கத்தின் மொத்த வருமானம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் உயர்வு – நிதி அமைச்சு

wpengine