விளையாட்டு

மஹேல – சங்கா முறுகலில்….



இங்கிலாந்து அணியின் முதல் ஒருநாள் போட்டிகளுக்கு இடையிலான ரோயல் லண்டன் கிண்ணம் ஒருநாள் போட்டியில் முதல் சுற்றில் வெற்றியீட்ட, இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார தலைமை தாங்கும் அணிக்கு நேற்று(28) வாய்ப்புக் கிட்டியது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சர்ரே அணியினர் 255ஓட்டங்களை குவித்திருந்த்ததோடு, அதற்கு பதிலாக துடுப்பெடுத்தாடிய யோக்ஷயர் அணியினர் 236 ஓட்டங்களைப் பெற்று 19ஓட்டங்கள் குறைவினால் தோல்வியினை தழுவியிருந்தது.

சர்ரே அணிக்காக விளையாடும் குமார் சங்கக்கார அவ்வணிக்கான வெறும் 4 ஓட்டங்களையே பெற்றிருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இலங்கை அணியின் முன்னாள் வீரரான மஹேல ஜெயவர்தனவின் தலைமையிலான சமர்செட் அணி மற்றும் வோவிக்ஷயர் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற 2ம் இறுதிச் சுற்றானது இன்று(29) நடைபெறவுள்ளது.

குறித்த போட்டியில் வெற்றியீட்டும் அணியானது சர்ரே அணியுடன் இறுதிப்போட்டியில் எதிர்வரும் செப்டெம்பர் 17ம் திகதி நடைபெறவுள்ளது.

இன்று(29) நடைபெறும் போட்டியில் மஹேல அணியானது வெற்றி பெற்றால் சங்கா – மஹேல இடையில் நல்லதோர் போட்டியினை எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தோல்வியின் காரணத்தினை கொட்டித்தீர்த்தார் ரங்கன ஹேரத்….

wpengine

இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் ஆஸி அணி மண்ணை கவ்வியது. (Update)

wpengine

மஹிந்தவுக்கு, பயிற்சியாளர்களுக்கு, ஆசிரியர்களுக்கு, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து மாலி அமைதியானார்..

wpengine