உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியின் இணையத்தள முடக்கம் – விசாரணைகள் ஆரம்பம்.



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபபூர்வ இணையத்தளத்துக்கு பலவந்தமாக பிரவேசித்த ஹேக்கர்கள் அதிலுள்ள தகவல்களை பிழையாக மாற்றிய சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதியின் அவசர பிரச்சாரப் பிரிவின் அதிகாரியின் உதவியும் பெறப்பட்டுள்ளது.

முதலாவது ஊடுருவலின்போது ஸ்ரீலங்கா யூத் என்ற பெயரில் சில வாசகங்கள் அதில்பிரசுரிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக கல்வி தொடர்பான கோரிக்கைககள் அதில் இடம்பெற்றிருந்தன.

இரண்டாவது ஊடுருவலின்போது பங்களாதேஷ் பிரஜை ஒருவரால் அது மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சைபர் தாக்குதலுக்குட்பட்டது.

தற்பொழுது குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை கணனி அவசர ஒன்றியத்தின் தகவல் பாதுகாப்பு பிரதான பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அமைதியின்மையால் பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு..!

wpengine

உலகில் அதிக நேரம் தூங்கும் நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தில்..!

wpengine

மின்தடை 3 மணித்தியாலங்களில் வழமைக்கு

wpengine