உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஷகீப் கொலை – சந்தேக நபர்களுக்கு வெளிநாடு செல்ல நீதவானால் தடையுத்தரவு.



பம்பலபிட்டி கோடீஸ்வர வர்த்தகர் மொஹம்மத் ஷகீப் சுலைமான்(29) இனது கொலை குறித்து பொலிசார் சந்தேகத்தின் பேரில் நோக்கப்பட்டுள்ள  ஐவருக்கு நாட்டை விட்டு வெளியேற கோட்டை மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் சற்றுமுன்னர் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கும் பொலிஸ் புலனாய்வுத் துறையினருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேற்குறித்த ஐந்து சந்தேக நபர்கள் குறித்த முக்கிய தகவல்கள் பொலிசாருக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக கொழும்பு குற்ற புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், சந்தேக நபர்கள் அதிலிருந்து கைநழுவ முற்படின் கைது செய்யுமாறும் நீதவானினால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

Related posts

20 வது அரசியலமைப்பு சீர்திருத்த யோசனை சமர்பிக்கப்பட்டது…

wpengine

புகையிரத தாமதம் காரணமாக மேலதிக பேரூந்துகள் சேவையில்…

wpengine

இலங்கை போராட்டம்; இந்திய உளவுத்துறையின் எச்சரிக்கை!

wpengine