உள்நாட்டு செய்திகள்

வெலேசுதாவிற்கு எதிரான ஹெரோயின் வழக்கு ஒத்திவைப்பு..



6.7 கிராம் ஹெரோயினை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனைப் பெற்று வரும் வெலே சுதாவின் வழக்கு விசாரணையை, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வி.டி.எச்.மொராயஸ், எதிர்வரும் நவம்பர் மாதம் 23ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

குறித்த வழக்கு மீதான விசாரணை இன்று புதன்கிழமை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி மணிலால் வைத்தியதிலக நீதிமன்றத்துக்கு சமூகம் அளிக்காததன் காரணத்தினால் நீதிபதி மொராயஸினால் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Related posts

ஜனாதிபதி பொலிஸாருக்கு விடுத்துள்ள உத்தரவு

wpengine

அரச தாதி உத்தியோகத்தர் சங்கமானது அடையாளப் பணிப்புறக்கணிப்பில்…

wpengine

இலங்கையில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களிற்கு நீதி – ரிஷி சுனாக்

wpengine