உள்நாட்டு செய்திகள்

பேராதனை பல்கலைக்கழக வளாகத்திலிருந்து முஸ்லிம்,தமிழ் மாணவர்கள் வெளியேற்றம்..



பேராதனை பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக அச்சத்துடன் தமிழ் மாணவ மாணவிகள் ஒட்டுமொத்தமாக வெளியேறியுள்ளனர்.

விடுதிகளில் தங்கியிருந்த மாணவிகளை வெளியேற வேண்டாமென பல்கலைக்கழக நிர்வாகம் வேண்டுகோள் விடுத்திருந்த போதும் மாணவிகள் அதனை புறக்கணித்து வெளியேறியுள்ளனர். வடகிழக்கை சேர்ந்த தமிழ் முஸ்ம் மாணவ மாணவிகளே வெளியேறியுள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக தாக்குதலிற்கான பழிவாங்கலாகவே இத்தாக்குதல் நடந்ததாகவும் 15 இற்கும் அதிகமான மாணவர்கள் தாக்கப்பட்ட போதும் நால்வரே வைத்தியசாலையினில் அனுமதிக்கப்பட்டதாக மாணவர் ஒன்றிய வட்டாரங்கள் தெரிவித்தன.

முற்று முழுதாக இனவாத ரீதியில் நடந்த இத்தாக்குதல் தமிழ் மாணவர்களது கற்றல் செயற்பாடுகளை கேள்விக்குரியதாக்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணிநீக்கம்…

wpengine

லுனுகம்வேஹர பேரூந்து விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயம்…

wpengine

வெள்ளை வேன் : ராஜித, ரூமிக்கு அழைப்பாணை

wpengine