உள்நாட்டு செய்திகள்

நாளை 7 மணித்தியால நீர் விநியோக தடை அமுல்படுத்த நடவடிக்கை.



திருகோணமலை மாவட்டத்தின் சில பிரதேசங்களில் நாளை 7 மணித்தியால நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

நாளை முற்பகல் 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை இந்த நீர்விநியோக தடை அமுலில் இருக்கும் என குறித்த சபை குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, திருகோணமலை நகரம், கந்தளாய், கிண்ணியா மற்றும் தம்பலகாமம் ஆகிய பிரதேசங்களில் இந்த நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

கந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் திருத்தப்பணிகள் காரணமாகவே இந்த நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

2017ம் ஆண்டு முதல் ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் இலங்கைக்கு..

wpengine

ஜீ – 7 மாநாட்டில் ஒபாமாவினை சந்திக்க ஜனாதிபதி ஆயத்தம்..

wpengine

சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான முக்கிய கலந்துரையாடல் இன்று..

wpengine