உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நாமல் ராஜபக்ஷ பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது. (UPDATE)



நாமல் ராஜபக்ஷ பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக FCID தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

என்றாலும், அவர் இதுவரை கைதாகவில்லை எனவும், வாக்குமூலம் அளிக்கிறார் எனவும் நாமலின் சட்டத்தரணி மேலும் தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ஷ பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜர்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

தனியார் நிறுவனம் ஒன்றின் 125 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்தமை தொடர்பிலான விசாரணைகளுக்காகவே அவர் இன்று(15) நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, வாக்குமூலம் அளிக்க உள்ளே செல்லும் போது, பொலிஸ் மா அதிபரின் செயற்பாடுகள் தொடர்பில் தான் வௌியே வந்து தெரிவிப்பதாக நாமல் கூறிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, றக்பி விளையாட்டுக்காக வழங்கப்பட்டதாக கூறப்படும் 70 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலும், நாமலுக்கு எதிராக நிதி குற்ற விசாரணைப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஸ்மார்ட் மீற்றர் மூலம் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படுமா?

wpengine

20வது அரசியலமைப்பு சீர்திருத்தம் தனிப்பட்ட பிரேரணையாக சமர்ப்பிக்கப்படும்..

wpengine

சாந்த அபேசேகர தொடர்ந்தும் விளக்கமறியல்

wpengine