உள்நாட்டு செய்திகள்

‘காணாமற்போனோரைக் கண்டுபிடிப்பதற்கான அலுவலகம் தெற்கிற்கும் வேண்டும் – ஜாதிக்க ஹெல உறுமய



‘காணாமற்போனோரைக் கண்டுபிடிப்பதற்காக அலுவலகமொன்று நிறுவப்படுமாயின், வடக்கைப் போன்று, தெற்கிலிருந்தும் காணாமற் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை, அந்த அலுவலகம் மேற்கொள்ள வேண்டும்’ என்று, ஜாதிக்க ஹெல உறுமய கட்சி கோரியுள்ளது.

காணாமற்போனோரைக் கண்டுபிடிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், யுத்த காலத்தின் போதும் அதன் பின்னரும் பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட 11 ஆயிரத்துக்கும் அதிகமான முன்னாள் போராளிகளிடத்திலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று ஹெல உறுமய கட்சியின் ஊடகப் பேச்சாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.

குருநாகலில் நடைபெற்ற ஜாதிக்க ஹெல உறுமய கட்சியின் தேசிய ஒன்றுகூடல், நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

Related posts

பெயர் களங்கப்படும் விதத்தில் முன்னெடுக்கப்படும் போலி பிரச்சாரங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை..

wpengine

2021.03.01 : அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

wpengine

இலங்கையினை நெருங்குகிறது தாழமுக்கம்.. – மக்கள் அவதானம்

wpengine