உலக செய்திகள்

தாய்லாந்தில் இரு குண்டுகள் ஒரே சமயத்தில் வெடித்ததில் ஒருவர் பலி, 19பேர் காயம்.



தாய்லாந்தில் சுற்றுலாப் பயணிகள் நடமாட்டம் கூடிய ஹுவாஹின் பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரு குண்டுகள் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் 19 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மலர்ச்சாடியொன்றுக்குள் பாதையோரத்தில் மறைத்து வைத்திருந்த இரு குண்டுகளே இவ்வாறு வெடித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

பேங்கோக் நகரிலிருந்து 200 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த சுற்றுலா நகர் அமையப் பெற்றுள்ளதாகவும், இத்தாக்குதலில் பல வெளிநாட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

தாய்லாந்தின் ஏனைய பகுதிகளில் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இதற்கு முன்னர் இடம்பெற்றுள்ள போதிலும் சுற்றுலாப் பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது மிகவும் குறைவு எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

Related posts

பாண்டா வடிவத்தில் இராட்சத சோலார் பண்ணை அமைக்கிறது சீனா…

wpengine

“செக்ஸ்” வழக்கில் இஸ்ரேல் உள்துறை மந்திரி ராஜினாமா

wpengine

வெள்ளிச் சுரங்க விபத்தில் 20 தொழிலாளர்கள் உயிரிழப்பு…

wpengine