உள்நாட்டு செய்திகள்

முச்சக்கரவண்டி மற்றும் வாடகை வாகனங்களுக்கு மீட்டர் முறை அறிமுகம் – ரிஷாத்



2017ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நாட்டில் உள்ள அனைத்து முச்சக்கரவண்டி மற்றும் வாடகை வாகனங்களுக்கு மீட்டர் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே அமைச்சர் இது தொடர்பில் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்;

தற்போதைய காலகட்டத்தில் மக்கள் பயணஞ் செய்வதற்கு முச்சக்கர வண்டிகளையும், வாடகை வாகனங்களையுமே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பயணிகளை ஏமாற்றி அதிக கட்டணங்களை அவர்கள் அறவிட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனைக் கருத்திற்கொண்டு எமது அமைச்சு டெக்சி மீட்டர்களை சரிபார்க்கும் திட்டம் ஒன்றைத் தயாரித்து முன்மொழிந்துள்ளது என்பதை  தெரிவிக்கின்றேன். இதன் மூலம் பயணிகள் சரியான, நம்பிக்கையான கட்டணங்களைச் செலுத்தி பயணங்களை மேற்கொள்ள வழிவகை செய்ய முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

Related posts

துபாயிடம் கொள்வனவு செய்யும் குடிநீருக்கு தடை

wpengine

நாட்டு நிலையைப் புரிந்து கொள்ளாத கல்வி அமைச்சராலும், அதிகாரிகளாலும் பாடசாலை நடத்துவது தொடர்பில் குழப்பமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. – இம்ரான் எம்.பி

News Editor

அமைதியின்மையால் பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு..!

wpengine