ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

முன்னாள் தலைவரின் மனைவி சென்ற கோவிலை நீர் ஊற்றி கழுவிய நிருவாகம்!!!



மஹிந்த ராஜபக்சவின் பாரியார், லசந்த விக்ரமதுங்கவிற்கு கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

சிறிய விடயமொன்றை கூறியமைக்காக இவ்வாறு அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்டதாக லசந்த விக்ரமதுங்கவே தம்மிடம் கூறியதாக அத்தனகல்ல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

இந்தியாவிலுள்ள இந்து கோவிலோன்றுக்கு செல்வதற்கு மஹிந்தவின் பாரியாருக்கு தடைவிதிக்கப்பட்ட போதிலும் பலவந்தமாக கணவருடன் அவர் கோவிலுக்குள் சென்றதாகவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார்.

இதன்பின்னர் குறித்த கோவிலை ஏழு நாட்களுக்கு நீர் ஊற்றி கழுவியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பான செய்தியை பத்திரிகையில் வெளியிட்டமைக்காக லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்ததாக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார்.

தற்போது வழங்கப்பட்டுள்ள ஊடக சுதந்திரத்தைப் பயன்படுத்தி சில ஊடகங்கள் மஹிந்த ராஜபக்சவிற்காக குரைத்துக்கொண்டிருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

Related posts

கம்மன்பிலவுக்காக மஹிந்த முதலைக்கண்ணீர்..

wpengine

Google இடமிருந்து செல்பி காணொளி வசதி.. முதல் முறையாக அமெரிக்காவில்..

wpengine

மருதாணிக்கு மாற்றாக கோண் எனப்படும் ஒரு வித இரசாயணக்கலவை

wpengine