உள்நாட்டு செய்திகள்

நிரந்தர நியமனம் வழங்கக்கோரி தொண்டராசிரியர்கள் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில்..



நிரந்தர நியமனத்திற்கு தெரிவு செய்தும் இதுவரை தமக்கு நியமனம் வழங்கப்படாததை கண்டித்து வடமாகாண தொண்டராசிரியர்கள் இன்றைய தினம் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுனர் அலுவலகத்திற்கு முன்னால் இன்று காலை முதல் இவர்கள் இந்த உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணம்,கிளிநொச்சி, முல்லைத்தீவு,வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களைச்சேர்ந்த தொண்டராசிரியர்களே இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

நாணயற் சுழற்சியில் இங்கிலாந்து அணிக்கு வெற்றி…

wpengine

மேலும் 6 நோயாளர்கள் பூரண குணம்

wpengine

தாஜுதீன் கொலை – DIG அனுரவின் விளக்கமறியல் நீடிப்பு

wpengine